விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 5% உள் இட ஒதுக்கீடு வழங்க கோரி விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே இன்று (நவ. 19) நடைபெற்றது. விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் மகேஸ்வரன் விஸ்வகர்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.