திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வைத்து இன்று (19-11-24) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் துணைமேயர் கே. ராஜூ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உதவி ஆணையாளர் சந்திரமோகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தார்கள். பொதுமக்களின் குறைகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க துணை மேயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.