திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 20ஆம் தேதி நீதிமன்ற வளாகம் முன்பு வெட்டி கொலை செய்தது. இந்த கொலையை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 22) போலீசாருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாயாண்டியின் உறவினர்கள் நேற்று மாலை உடலை பெற்று சென்றனர்.