மூன்று ஆண்டுகளுக்கான உட்கட்சித் தேர்தல் சுத்தமல்லி எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக மண்டல செயலாளர் கனி கலந்து கொண்டு தேர்தலை நடத்தினார். இதில் நகர நிர்வாகத்தின் தலைவராக பயாஸ், செயலாளராக இலியாஸ், பொருளாளராக அய்யூப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.