பாஜகவில் சேரும்படி என்னை மிரட்டுகிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் பாஜகவில் சேர்ந்தால் விட்டுவிடுகிறோம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் எனவும் கூறியுள்ளார். ஆனால் நாங்கள் எந்தவொரு தவறும் செய்யவில்லை. என்னை சிறையில் அடைத்தாலும் பாஜகவில் சேரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன் என அவர் குற்றசாட்டியுள்ளார்.