அல்சைமர் நோயை பொருத்தவரையில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. வீட்டிலோ அல்லது வெளியிலோ சாதாரணமாக எடுத்த பொருள்களை எங்கிருந்து எடுத்தோம், எங்கே வைத்தோம் என்று மறப்பது தொடக்க நிலை. பிறந்த நாள், பெயர்கள், சமையல் செய்யும் போது அடுத்தடுத்து என்னென்ன பொருள்களை சேர்ப்பது என்பதில் மறதி, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது, பேச்சில் தடுமாற்றம் ஆகியவை முக்கியமான அறிகுறிகள் ஆகும்.