நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீசிய நபர்களால் பரபரப்பு

65035பார்த்தது
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், கலர் புகைக்குண்டுகளை வீசியதால் எழுந்த புகையால் அவையில் இருந்த உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வீசிய பொருள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2001ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், இன்று 22ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய சம்பவம் பயங்கரவாத சதியா? என விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி