தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணி, மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மாவட்ட மகளிரணி தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, தேனி வட்டார தலைவர் முருகன், பெரியகுளம் வட்டார தலைவர் ஹம்சா முகமது, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, மாவட்ட செயலாளர் அபுதாகீர் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தேனி நகர தலைவர் கோபிநாத் நன்றி கூறினார்.