கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை சார்பாக மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஊராட்சி பகுதியைச் சார்ந்த பெரும்பாலானோர் கலந்து கொண்டு மருத்துவம் சார்ந்த குறைபாடுகளுக்கு தீர்வு கண்டனர். செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நடைபெற்ற முகாமில் பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்தனர்.