கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தமிழக கேரளா எல்லைப் பகுதியில் கூடலூர் அருகே காஞ்சிமரத்துறையில் பெரியார் புலிகள் காப்பக கேரளா வனத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் அத்துமீறி தமிழ்நாடு அரசின் எவ்வித அனுமதியும் இன்றி தமிழக எல்லையில் அலுவலகத்தை திறந்து.

கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை தமிழக பகுதியில் அமைந்துள்ள கிராம பகுதிகளுக்கு மாட்டு வண்டி சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் சென்று தங்களுடைய மாநில சுற்றுலாவை வளர்த்துக் கொண்டு உள்ளார்கள், என்று குற்றம் சாற்றி பெரியார் வைகை பாசன விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கேரள வனத்துறைக்கு சொந்தமான அலுவலக முன்பு கூடி உடனடியாக இந்த அலுவலகத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கேரளா வனத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்

தொடர்ந்து கேரளா அலுவலகம் தமிழகப் பகுதியில்கேரள வனத்துறை அலுவலகம் செயல்பட்டால் ஐந்து மாவட்ட விவசாயிகளும் ஒன்றிணைந்து அலுவலகத்தை சீல் வைக்கும் வரை ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தால் ஏராளமான போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தொடர்புடைய செய்தி