சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் சுற்றுலா

50பார்த்தது
சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.
சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்

இந்நிலையில் சுருளி அருவி செல்லும் வழியில் வெண்ணியாறு பாலம் அருகே
யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த கூட்டம் குட்டிகளுடன் அங்கேயே முகாமிட்டுள்ளது.

இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளித்து நீராடுவதற்காக ஆர்வத்துடன் வந்தனர்.

இந்நிலையில் அருவிக்கு செல்லும் சாலையில் யானைகள் முகாமிட்டு உள்ளதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி