சோழவந்தான் - Cholavanthaan

மதுரை : மர்ம மரணம்; உடலை தோண்டி பிரேத பரிசோதனை

மதுரை : மர்ம மரணம்; உடலை தோண்டி பிரேத பரிசோதனை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை பேங்க் காலனியில் வசிக்கும் பாலமுருகன் (44) என்பவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்தார். இவர் கடந்த அக்., 25 இரவு உடலில் சுடுதண்ணீர் பட்ட காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது தாய் வாங்கிய கடன் விவகாரத்தில் என்னுடன் தகராறு செய்தார்.  அவர்தான் என் மீது சுடுதண்ணீரை ஊற்றியதாக தெரிவித்துள்ளார். கடந்த அக்., 30 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பாலமுருகன், அக்., 31ல் இறந்தார். இதனை போலீசுக்கு தகவல் தராமல் பரவை மயானத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து சமயநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், மாயாண்டி புகாரில் வடக்கு தாசில்தார் மஸ்தான் கனி முன்னிலையில் நேற்று பாலமுருகன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా