சோழவந்தானில் ஒன்றிய அரசை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம்

54பார்த்தது
சோழவந்தானில் ஒன்றிய அரசை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தானில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 

பாஜக மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், வேலைவாய்ப்பை அளிக்கும் சிறு குறு நிறுவனங்களை அளிக்கும் போக்கு, சம்பள உயர்வை விட விலைவாசி உயர்வு பல மடங்கு மாறிப்போனது, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்ந்து இந்த ஆட்சியில் நடைபெற்று வருகிறது, கூட்டாட்சியை சீரழிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் என பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை பற்றி தெருமுனையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி