தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் பிரவீன் சித்தார்த் (26). இவர் தனது தம்பியுடன் சம்பவத்தன்று போடி - மூணாறு சாலையில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் சையது உசேன் என்பவர் உணவு இல்லை எனக் கூறி, அவர்களிடம் தகராறு செய்து பிரவீன் சித்தார்த்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சையது உசேனை நேற்று (செப். 9) கைது செய்தனர்.