எம் கே எம் சட்ட அலுவலகம் திறப்பு விழா

51பார்த்தது
எம் கே எம் சட்ட அலுவலகம் திறப்பு விழா
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே எம் கே எம் சட்ட அலுவலகம் மற்றும் வினோரா லா அசோசியேட்ஸ் அலுவலகம் திறப்பு விழா தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம் கே எம் முத்துராமலிங்கம் தமிழ்நாடு தொண்டு நிறுவனம் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வி ஆர் ராஜன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் தமிழ்நாடு வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ஏ எம் விக்கிரம ராஜா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் வணிகர் சங்க பேரவை தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், கௌரவ தலைவர் சந்திரகுமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, உள்பட தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி