தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஸ்ரீ விஷ்வபிரம்மா கல்வி அறக்கட்டளையின் சார்பில்
நட்பு நண்பர்களின் கூட்டமைப்பின் கல்வி ஊக்கத் தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா 28-07-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5. 00 மணிக்குமேல் தெலுங்கு விஸ்வகர்மா சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு விழாவில் 10 மற்றும் 12
வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற, விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் பரிசு பொருள்கள்
வழங்கப்பட்டது. இவ்விழாவில் நிறுவன செயலாளர் எஸ். சேகர் ( ஸ்ரீ விஸ்வபிரம்மா நட்பு
நண்பர்களின் கூட்டமைப்பு ஸ்ரீ விஷ்வபிரம்மா கல்வி அறக்கட்டளை) தலைமையிலும்
மற்றும் 27-வது பகுதி தெலுங்கு விஸ்வகர்மா மகாஜன சங்க தலைவர் P. மாரியப்பன்,
நிறுவனச் செயலாளர் எஸ். சேகர், பொருளாளர் R. P. நாகராஜ், உதவி தலைவர் R. S.
நாகராஜ், உதவிச் செயலாளர் R. அண்ணாமலை கௌரவ ஆலோசர்கள் மற்றும் செயற்குழு
உறுப்பினர்கள், விஸ்வகர்மா சமுதாயப் பெரியோர்களும் தாய்மார்களும் ஆசிரியர்
பெரியோர்களும் மற்றும்
ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்கொடையாளர்களும் திரளாக இவ்விழாவில் கொண்டனர்.