ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

548பார்த்தது
தேனி மாவட்டம் போடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆதி தமிழர் பேரவை சார்பாக தேனி மேற்கு மாவட்ட செயலாளர் மாவீரன் தலைமையில் வீடற்ற அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்போடி நகரச் செயலாளர் வினோத் போடி ஒன்றிய செயலாளர் மாரி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் நீலகணலன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆதித்தமிழர் பேரவையினர் சார்பாக வீடற்ற அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் மணிமாறனிடம் மனு வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி