பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக மும்பை போலீசாருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய 34 வயதான பெண் மோடியை கொலை செய்ய தன்னிடம் ஆயுதம் தயாராக இருப்பதாக கூறினார். கைதான அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் விரைவில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.