ஆந்திர மாநிலத்தின் கொடவலூர் மண்டலத்தை சேர்ந்த ஹாசினி (35) திருநங்கையாவார். இவர் திருப்பதி, நெல்லூர் பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளுக்கு தலைவியாக இருந்தார். ஹாசினி கடந்த செவ்வாய் (நவ. 26) இரவு மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில் குற்றவாளிகளை போலீஸ் தேடுகிறது. அவரின் சடலம் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு, ஆந்திராவை சேர்ந்த திருநங்கைகள் குவிந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.