தமிழகத்தில் 2024-ல் பேறுகால தாய்மார்களின் உயிரிழப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. 2023-2024ல் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக இருந்த தாய்மார்களின் உயிரிழப்பு விகிதம் 2024-ல் 39.4 ஆக குறைந்துள்ளது. 2020-21ல் உயிரிழப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 73 ஆகவும், 2021-22ல் 90.5 ஆகவும், 2022-23ல் 52 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1000 பிறப்புகளுக்கு 8.2 ஆக இருந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் 7.7 ஆக குறைந்துள்ளது.