நாகையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'ஃபெங்கல் புயல்' உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 2 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரே இடத்தில் நிற்கிறது. அடுத்த நகர்வு குறித்து வானிலை மையம் கண்காணித்து வருகிறது. சென்னையில் இருந்து 480 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.