புதுக்கோட்டை மண்டையூர் காவல் நிலையத்தில் விமலா என்ற பெண் காவலர் பணியாற்றி வந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று (நவ. 28) காலை வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் விமலா பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சொகுசு கார் அவர் வாகனம் மீது மோதிய விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் விமலா குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.