ஆண்டிபட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் நுழைவாயிலில் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றவாறு பள்ளிக்குள் சென்றனர். இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.