குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

56பார்த்தது
குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட எருதி மக்கள் பட்டி கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் தெரிந்து வந்த ராஜதானி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்த நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி