தேனி, அல்லிநகரத்தில் அமைந்துள்ள இந்து எழுச்சி முன்னணி காரியாலயத்தில் இன்று வார வழிபாடு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, இந்து எழுச்சி முன்னணி நகரச் செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரத்தினம் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.