மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
தேனி மாவட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 23 புளிய மரங்களை வெட்ட ஒப்பந்தம் விடப்பட்டு தற்பொழுது மரம் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியினர் வெட்டிய மரங்களை கையில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி