அன்றும் இன்றும் - நெல்லையை மூழ்கடித்த வெள்ளம்

3611பார்த்தது
அன்றும் இன்றும் - நெல்லையை மூழ்கடித்த வெள்ளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்குக்கு சுழற்சி காரணமாக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்திலாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. திருநெல்வேலிக்கு இது ஒன்றும் புதியது இல்லை. கடந்த 1992ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டு நகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் 32 வருடங்களுக்கு பிறகு மழை வெள்ளத்தால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது.