15 வயது சிறுமிக்கு 20 நாட்கள் பாலியல் தொல்லை

71511பார்த்தது
15 வயது சிறுமிக்கு 20 நாட்கள் பாலியல் தொல்லை
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 15 வயது சிறுமியை மூன்று பேர் கடத்திச் சென்று 20 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தந்தை போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில் இது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் சிறுமியை மீட்டு குற்றவாளிகளைக் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.