துணைநிலை ஆளுநருக்கான உள் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. டெல்லி மாநகராட்சி நியமன உறுப்பினர்களை டெல்லி அரசு அல்லது அமைச்சரவை குழு ஆகியவற்றின் ஆலோசனை அல்லது கருத்துக்களை கேட்காமல் நியமனம் செய்ய துணைநிலை ஆளுநருக்கு தடையில்லை என டெல்லி துணைநிலை ஆளுநருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.