எமனாக வந்த ஸ்பீடு பிரேக்கர்.. இளைஞர் பலி

81பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் என்னும் பகுதியில் மாதோநகரைச் சேர்ந்த புனித் கண்ணா என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழியின் நடுவே, ஸ்பீடு பிரேக்கர் இருப்பதை அறியாத அவர் அதன் மேலே ஏற்றினார். அதில் கட்டுப்பாட்டை இழந்த பைக்கில் இருந்து அந்த இளைஞர் பறந்து கீழே விழுந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி