தந்தையை உயிருடன் கொளுத்திய மகன்

66பார்த்தது
சென்னை தண்டையார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. பகுதியை சேர்ந்தவர் சத்திய மூர்த்தி. இவர், தனது வீட்டில் பாதி எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் அவரது மகன் தனுஷ்கோடிதான் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், வேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்ததால் கீழே தள்ளிவிட்டேன். அப்போது தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய அவரை தீயிட்டு கொளுத்தியதாக தனுஷ்கோடி கூறியுள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி