உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்புப் பாதுகாப்பு குழுவினருக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடும் வெள்ளம் கரை புரண்டு ஓடும் ஆற்றில் தைரியமாக இறங்கி அந்த வாலிபரை மீட்பு குழுவினர் மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.