ரயில் தண்டவாளங்களில் யானைகள் அடிபட்டு இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழகம் - கேரளா எல்லையில் வாளையார் வனப்பகுதியில் தண்டவாளத்தின் இருபுறமும் இரும்பு வேலி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு வசதியாக, சில இடங்களில் தண்டவாளத்திற்கு கீழே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன், யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.