மாணவியின் தலை முடியை பிடித்து இழுத்த பிரின்சிபால்

58பார்த்தது
மாணவியின் தலை முடியை பிடித்து இழுத்த பிரின்சிபால்
உடுமலை அரசு கலை கல்லூரியில் 3ஆம் ஆண்டு வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. மேலும் அதே நேரத்தை மற்ற துறையை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வணிகவியல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை செல்போனில் படமெடுத்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை கல்லூரி முதல்வர் கல்யாணி தலை முடியை பிடித்து இழுத்தும் செல்போனை பிடுங்கியும் அங்கிருந்து வெளியேற சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி முதல்வரை சிறைபிடித்து 5 மணிநேரமாக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர் சம்மந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.