தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குமணன்தொழு, ஆலந்தளிர் பகுதிகளில் நேற்று(மே 11) ஒரே இரவில் வெறி நாய் கடித்ததில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, வெறி நாய் கடித்து காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதனால், வெறி நாயைப் பிடிக்கும் பணியில் குமணன்தொழு ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.