பேயோட்ட வந்த பெண்ணை பலாத்காரம் செய்த நபர்

92617பார்த்தது
பேயோட்ட வந்த பெண்ணை பலாத்காரம் செய்த நபர்
உ.பி. மாநிலம் அம்பேத்கர் நகரில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ஒரு குடும்பம் உ.பியில் வசித்துவருகிறது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், முகமது அஷ்ரப் (50) என்ற பேயோட்டுபவரிடம் அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அஷ்ரப் அந்த பெண்ணின் கணவனையும் அத்தையையும் வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை உள்ளே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்து தப்பி ஓடிய அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.