முதியவரை அடித்து தூக்கிய ஆடி கார்.. சுருண்டு விழுந்து பலி..

77பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று (மே 26) காலை ஜனக் தேவ் ஷா (63) என்ற முதியவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்து பின்னால் வந்த விலை உயர்ந்த ஆடி கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த முதியவர் காற்றில் பறந்து சுழன்று கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய ஆடி கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி