அடுத்த ஒரு வாரம் மிரட்டப்போகுது வெயில்

37249பார்த்தது
அடுத்த ஒரு வாரம் மிரட்டப்போகுது வெயில்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தொடர்புடைய செய்தி