நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோரின் விவாகரத்து வழக்கு கடந்த ஏப்ரல் 15, அக்டோபர் 7, 19 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால், வழக்கை இன்று (நவ.2ம்) நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி, இன்று மீண்டும் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.