பெண் ஆடையை கழட்ட சொன்ன மாஜிஸ்திரேட்

2242பார்த்தது
பெண் ஆடையை கழட்ட சொன்ன மாஜிஸ்திரேட்
ராஜஸ்தானில் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பட்டியலின பெண்ணிடம், வாக்குமூலம் பெறும் போது ஆடைகளை கழற்றக் கூறியதாக ஹிண்டாவுன் நகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காயங்களை பார்க்க வேண்டும், ஆடைகளை கழற்று என மாஜிஸ்திரேட் கூறியதாக, போலீசில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.