"மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது"

85பார்த்தது
"மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது"
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் பழைய நடைமுறை படி உள்ளூர் வாசிகளுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. 2020ம் ஆண்டு நடைமுறை படி உள்ளூர் வாகனங்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மேலும், ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி