"சட்டப் போராட்டம் தொடரும்..." ஆதவ் அர்ஜுனா

58பார்த்தது
"சட்டப் போராட்டம் தொடரும்..." ஆதவ் அர்ஜுனா
'விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1% வாக்குகளைக் கூட பெறவில்லை' என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்று முற்றிலும் தவறானது. விசிக 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1.51% வாக்குகளையும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 1.18% வாக்குகளையும் பெற்றுள்ளது. விசிகவின் அரசியல் அங்கீகாரத்திற்கான சட்டப் போராட்டம் தொடரும்.
விசிகவுக்கு பொதுச் சின்னம் வழங்குவதில் மட்டும் இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்? தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு விசிகவுக்கு கிடைக்க வேண்டிய பொதுச் சின்னத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி