முத்தக் காட்சி; ஹிருத்திக் ரோஷனுக்கு நோட்டீஸ்!

78506பார்த்தது
முத்தக் காட்சி; ஹிருத்திக் ரோஷனுக்கு நோட்டீஸ்!
விமானப்படை சீருடையில் 'ஃபைட்டர்' பட முத்தக் காட்சியில் நடித்துள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள படம் ‘ஃபைட்டர்’. படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே விமானப்படை சீருடை அணிந்து முத்தக்காட்சியில் நடித்ததற்காக தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் சௌமியா தீப் தாஸ் என்பவர் படத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். சீருடை அணிந்து முத்தமிடும் காட்சி மூலம் விமானப்படையை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி