உயிருக்குப் போராடி ஆபத்தில் இருந்த சீனரை காப்பாற்ற இந்திய கடற்படை துணிச்சலான நடவடிக்கையில் ஈடுபட்டது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, மும்பையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் பயணித்த சீன சரக்குக் கப்பலின் பணியாளர்கள், தங்களது பணியாளர்களில் ஒருவர் காயமடைந்ததாக மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு அவசரச் செய்தியை அனுப்பியுள்ளனர். இந்திய கடற்படையின் சீ கிங் ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.