விஜய்யை வெட்கப்படவைத்த பெண் (வீடியோ)

79பார்த்தது
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று(ஜூலை 3) இரண்டாவது கட்டமாக, பொதுத்தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழை பெற்று சென்றனர். அப்போது தனது மகளுடன் மேடைக்கு வந்த ஒரு பெண் விஜய்யை பார்த்து "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற" என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடினார். இதனை கேட்ட விஜய் உடனே செய்வதறியாமல் வெக்கப்பட்டு சிரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நன்றி: நியூஸ் 7 தமிழ்

தொடர்புடைய செய்தி