பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இதுகுறித்து பாட்மிண்டன் வீராங்கனையும், பாஜக உறுப்பினருமான சாய்னா நேவால் கூறுகையில், “என்னைக் கேட்டால் வினேஷ் போகத் மீது தவறு இருக்கிறது. மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை விட வினேஷ் போகத் இந்த பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு பெரிய போட்டிக்கு முன்பு இந்த தவறை அவர் செய்திருக்கக் கூடாது” என கருத்து தெரிவித்துள்ளார்.