மணமகனை கொலை செய்த தந்தை

60பார்த்தது
மணமகனை கொலை செய்த தந்தை
சற்று நேரத்தில் தனக்கு திருமணம் நடந்துவிடும் என்ற ஆசையில் காத்திருந்த மணமகனை அவரது தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். டெல்லியில் நடந்த இந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கவுரவ்சங்கல் (29) என்ற அந்த இளைஞர் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. அப்போது அவருக்கும் அவரின் தந்தை ரங்காலாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரங்களால் தனது மகனை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கு இருந்தால் மாட்டிவிடுவோம் என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி