புதுமையான சிந்தனையாளரின் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்

64பார்த்தது
புதுமையான சிந்தனையாளரின் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
ராமோஜி ராவ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “இந்திய ஊடகம் மற்றும் சினிமா துறையின் உச்சமாக திகழ்ந்த ஈனாடு குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவின் மறைவு வருத்தமளிக்கிறது. ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி ஒரு படப்பிடிப்பு தளம் மட்டுமல்ல, பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. தொலைநோக்கு மற்றும் புதுமையான சிந்தனையாளரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும், அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி