பஞ்சாபின் குருத்வாரா அருகே இன்று (ஜூன் 8) காலை 30 வயது பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் பல்ஜிந்தர் கவுர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காததால் குற்றவாளி பெண்ணை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.