மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி?

13439பார்த்தது
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி?
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் மக்களவை குழு தலைவரை தேர்வு செய்ய இன்று (08.06.2024) மாலை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கபடலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி